பாகிஸ்தான் தற்கொலைக் குண்டு தாக்குதல் – ISIS அமைப்பு பொறுப்பேற்பு!
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காதிஜா அல்-குப்ரா (Khadija Al-Kubra) என அறியப்படும் நபர் தற்கொலை குண்டு தாக்குதலை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதல்தாரியின் தாய், சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி, பலர் வைத்தியசாலையில்!




