முன்னணி வீரர்கள் இன்றி அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், UAE, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
பாபர் அசாம் நல்ல வீரர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருடைய பேட்டிங்கில் சில விஷயத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சில விஷயங்களில் அவர் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறார்” என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹேசன் தெரிவித்துள்ளார்.
சைம் அயூப், சஹிப்ஜதா பர்ஹான், பஹர் ஜமான், முகமது ஹாரிஸ், சல்மான் அலி ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், ஹூசைன் தலாத், பகீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது வாசிம், சல்மான் மிர்சா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.