பாகிஸ்தான் வணிக வளாக தீவிபத்து – பலி எண்ணிக்கை உயர்வு!
பாகிஸ்தானின் கராச்சியில் வணிக வளாகம் பற்றி எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
60 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
1,200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தில் காற்றோட்டம் இல்லாததால் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
12 மணிநேர போராட்டம் : 06 பேர் மரணம் – பாகிஸ்தானில் பற்றி எரியும் வணிக வளாகம்!





