சீன தலைமையை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
சீனாவில் 5 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதம ர் ஷொபாஸ் ஷெரிப்,வியாழக்கிழமை தலைநக் பெய்ஜிங் வந்தடைந்துள்ளார்.
‘எந்ந சூழலிலும் அழியாத நட்பு’என்று கூறப்படும் சீன-பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்தவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிள்ள தங்களது நாட்டுக்கு கூடுதல் நிதியுதவி கோரவும் கடந்த 4ம் திகதி முதல் ஷெபாஸ் ஷெரீப் சீனாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
தெற்கு பகுதியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நகரமான ஷென்ஷெனுக்கு புதன் கிழமை வந்த அவர், அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.
இந்த நிலையில் பெய்ஜிங் நகருக்கு அவர் தற்போது வந்துள்ளார் அங்கு அதிபர் ஷிஜின்பிங்,பிரதமர் லீ கிகியாங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவார் .
அந்தப் பேச்சு வார்த்தைகளின் போது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதி்பார்க்கப்படுகிறது.