விளையாட்டு

ஷாகித் அப்ரிடி மீது குற்றம்சுமத்தும் பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், டேனிஷ் கனேரியா தனது சக வீரரான ஷாகித் அப்ரிடி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான்.

ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை.

மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் ஷாகித் அப்ரிடி அதிகமாக பேசுவார். என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை என தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ