நச்சு புகையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் : சுகாதார அவசரநிலை அறிவிப்பு!
புகைமூட்டம் காரணமாக பாகிஸ்தானின் ஒரு மாகாணம் சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், ஏனைய இரு நகரங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நச்சு புகைமூட்டம் பஞ்சாபை பல வாரங்களாக பாதித்துள்ளது. ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மூத்த மாகாண அமைச்சர் மரியம் ஔரங்கசீப், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், நெருக்கடி நிலையை எதிர்கொள்வற்கான திட்டங்களையும் முன்வைத்துள்ளார்.
இதன்படி மருத்துவ ஊழியர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டது, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும்.
மாலை 4 மணிக்கு உணவகங்கள் மூடப்படும். இரவு 8 மணி வரை டேக்அவே கிடைக்கும். அதிகாரிகள் முல்தான் மற்றும் லாகூர் நகரங்களில் பூட்டுதலை விதித்து, அந்த இரண்டு இடங்களில் கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
“புகை தற்போது ஒரு தேசிய பேரழிவாக உள்ளது,” என்றும் ஔரங்கசீப் கூறியுள்ளார்.