பிரித்தானியாவிற்கு சீனா மூலம் அச்சுறுத்தல் : 90,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம்
பிரித்தானியாவின் தூய்மை எரிசக்தித் துறை சீனா மீது கொண்டுள்ள அதீத சார்பு காரணமாக, எதிர்காலத்தில் சுமார் 90,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக IPPR (The Institute For Public Policy Research) ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, மின்கல விநியோகத்தில் ஏற்படும் சிறு தடங்கல்கள் கூட 5 இலட்சத்து 80 ஆயிரம் வாகனங்களின் உற்பத்தியைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தூய்மை எரிசக்தி இலக்குகள் எட்டுவதில் தாமதம் ஏற்பட்டு, பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் கூடுதல் இழப்பு ஏற்படக்கூடும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எனவே, நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) ‘செக்யுரோனோமிக்ஸ்’ (securonomics) கொள்கையின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





