இலங்கை செய்தி

600 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு பறிமுதல்

Over 600 kg of narcotics found in seized fishing vessel

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் 600 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ​​இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் கப்பலைகரைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

படகிலிருந்து பாதுகாப்புப் படையினரும் கணிசமான எண்ணிக்கையிலான ஆயுதங்களை மீட்டதாக அமைச்சர் விஜேபால மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, மார்ச் மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் மற்றொரு மீன்பிடி இழுவைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

அதில் 102 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 900 கிராம் கொகைன் போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டன.

கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!