சாதாரண தரப் பரீட்சை – இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டங்கள் மீறப்பட்டால், காவல்துறைக்கும் தமக்கும் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)