வடக்கு மாசிடோனியா பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் எதிர்க்கட்சி பாரிய வெற்றி
வடக்கு மாசிடோனியாவின் வலதுசாரி எதிர்க்கட்சி புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் பெரிய வெற்றியைப் பெற்றது,
எதிர்க்கட்சியான VMRO-DPMNE கட்சியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஸ்கோப்ஜே நகரத்தில் உள்ள தங்கள் கட்சித் தலைமையகத்திற்கு வெளியே தேசிய மற்றும் கட்சிக் கொடிகளை அசைத்து, நாட்டுப்புற இசைக்கு நடனமாடி கொண்டாடியுள்ளனர்.
இதன்போது மாசிடோனியாவின் அன்பான மக்களே… நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மாசிடோனியா வெற்றி பெற்றது. இது மக்களின் வரலாற்று வெற்றி” என்று VMRO-DPMNE தலைவர் ஹிரிஸ்டிஜான் மிக்கோஸ்கி கூட்டத்தில் கூறியுள்ளார்.
(Visited 31 times, 1 visits today)





