காசாவில் சிறைப்பிடிக்கப்பட்ட 03 இஸ்ரேலியர்களை விடுதலை செய்ய வாய்ப்பு!

காசா ஸ்ட்ரிப்பில் சிறைபிடிக்கப்பட்ட மேலும் மூன்று இஸ்ரேலியர்கள் இன்று (15.02) விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளை இதற்கு ஈடாக விடுவிக்க வேண்டும்.
போர் நிறுத்தம் ஒப்பந்தம் சமீபகாலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
காசாவிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை அகற்றி, பிராந்தியத்தில் வேறு எங்கும் குடியேற ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)