இலங்கை

யாழில் 86 கோடி பெறுமதியான அபின் போதைப்பொருள் மீட்பு

வடக்கில் முதல்முறையாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகை பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளது

48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் திங்கட்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளது

நாடாளாவியரீதியில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!