இலங்கை

மதுபான விற்பனை நிலையங்கள் செயற்பாட்டு நேரங்கள் திருத்தம் : வெளியான அறிவிப்பு

டிசம்பர் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானக் கடைகள் மற்றும் ஏனைய மதுபானசாலைகள் உரிமம் பெற்ற நிறுவனங்களின் செயற்பாட்டு நேரங்கள் திருத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (FL4 உரிமம்) இனி காலை 08:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.

இதேவேளை, வளாகத்தில் மது அருந்துவதற்கான மதுபான விற்பனை நிலையங்கள் (சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்படாத ) காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் மற்றும் வளாகத்தில் மது அருந்துவதற்கான மதுபான விற்பனை நிலையங்கள் (சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்பட்ட ) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

FL7 மற்றும் FL8 மதுபான உரிமங்களைக் கொண்ட சுற்றுலா சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் (3 நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்கள்) – காலை 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும்.

ஏனைய அனைத்து ஹோட்டல்களும் காலை 10 முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரங்கள் குறித்த முழு விவரம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்