“ட்ரம்பால் மட்டுமே புட்டினை தடுக்க முடியும்” – போலந்து ஜனாதிபதி!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தடுக்கக்கூடிய ஒரே நபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே என போலந்து ஜனாதிபதி கூறியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு உதவுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிபிசி ஊடகத்திற்கு இன்று கருத்து வெளியிட்டுள்ள போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki), ரஷ்யா இன்னும் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய ஒரே தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே, இந்தச் செயல்பாட்டில் நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு பெலாரஸ் மற்றும் உக்ரைனில் இருந்து குறைந்தது 20 ட்ரோன்கள் போலந்து வான்வெளியை மீறின. இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “அசாதாரண சூழ்நிலை” என்று விவரித்துள்ளார்.
“அதுவரை, எந்த நேட்டோ உறுப்பு நாடும் அந்த அளவிலான ட்ரோன் தாக்குதலை சந்தித்ததில்லை” என்றும் போலந்து மற்றும் நேட்டோ பாதுகாப்புகளை சோதிக்க புடின் முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.





