அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இணையவழி முறையில் பணம் செலுத்த திட்டம்
அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இணையவழி முறையில் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல உள்ளூராட்சி நிறுவனங்கள் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுராட்சி அதிகாரிகளின் வரி அறவீடு நடவடிக்கைகள் உட்பட மக்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளூராட்சி நிறுவனங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)