இஸ்ரேலிய பொலிஸார் தற்செயலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
இஸ்ரேலிய பொலிசார் தற்செயலாக பாலஸ்தீன இளம் பெண்ணை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இளம் பெண் கொல்லப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
மேற்குக்கரை சோதனைச் சாவடியில் இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இதனையடுத்து குறித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஜெருசலேமுக்கு வடமேற்கே உள்ள பாலஸ்தீனிய கிராமமான பிட்டுக்கு அருகில் உள்ள கடவுப்பாதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)