ரஷ்யாவில் சிறுமி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, பலர் காயம்!

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகரில் உள்ள ஒரு பள்ளியில் இன்று (07.12) 14 வயது சிறுமி ஒருவர் சக மாணவரை சுட்டுக் கொன்று மேலும் ஐந்து குழந்தைகளைக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“முதற்கட்ட விசாரணை தரவுகளின்படி, 14 வயது சிறுமி ஒரு பம்ப்-ஆக்ஷன் துப்பாக்கியை பள்ளிக்கு கொண்டு வந்த நிலையில், அவர் தனது சக நண்பர்களை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமியின் நோக்கத்தை அறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் இதை “பயங்கரமான சோகம்” என்று அழைத்தார்.
(Visited 12 times, 1 visits today)