வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் தீவிரம் – ஒருவர் உயிரிழப்பு , 25 பேர் வைத்தியசாலையில்
வடக்கு இஸ்ரேலின் நஹாரியா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவசர சேவை மாகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் 50 வயதுடைய ஒருவருக்கு கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 13 பேர் சிறியளவான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவசர சேவை கூறியுள்ளது.
இதேவேளை, லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.




