இலங்கையில் ஐந்தில் ஒருவர் மன நோயால் பாதிப்பு – மருத்துவர் அதிர்ச்சி தகவல்
நாட்டின் மக்கள் தொகையில் ஐந்து பேரில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக மூத்த மனநல மருத்துவர் சஞ்சீவனா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.
அதன்படி, பதிவான தற்கொலைகளில் 50 சதவீதம் மனநோய்களால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 8 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இது வருடத்திற்கு சுமார் 3200 பேராகும்.
பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பெரிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாதல், கஞ்சா மற்றும் ஐஸ் பயன்பாடு போன்ற நிலைமைகளின் அதிகரிப்பு மனநோய்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாகவும், மதுவுக்கு அதிக நாட்டம் கொண்டவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் கூறப்பட்டது.
ஒஆன்லைன் சூதாட்டம் இன்று ஒரு புதிய போதைப்பொருளாக மாறியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இணையத்திற்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் சஞ்சீவனா அமரசிங்க கூறுகிறார்.





