உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினையால் சிக்கி தவிக்கும் ஒரு பில்லியன் மக்கள்
உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உலகளவில் 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இது தெரியவந்துள்ளது.
1990 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடையில், பருமனான பெரியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் 5 முதல் 19 வயதுடைய பருமனான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
இதற்கு முன்னர் பணக்கார நாடுகளில் உடல் பருமன் பதிவாகியிருந்தது.
இருந்த போதிலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)