அமெரிக்காவில் டெஸ்லா கார்களை ஏற்றிச் சென்ற லொரியில் ஏற்பட்ட விபரீதம் – தீயில் கருகிய கார்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில், 8 டெஸ்லா கார்களை ஏற்றிச் சென்ற லொரியில் திடீரென தீ பற்றியது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் 6 கார்கள் எரிந்து சேதமடைந்தன.
சனிக்கிழமை மாலை 5:35 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில், 6 கார்கள் தீக்கிரையாகியன. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரவு 9:30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவிபத்து காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கரும்புகை மற்றும் தீப்பிழம்புகளைக் காட்டும் வீடியோ X வைரலாக பரவி வருகிறது.
ஆரம்பத்தில், லித்தியம்-அயன் பேட்டரி காரணமாக தீ ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. பின்னர், டெஸ்லா தரப்பில், தீ மூன்றாம் தரப்பு அரை டிரக்கிலிருந்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். சேதமடைந்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் மாற்று வாகனங்கள் வழங்கப்படும் என டெஸ்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.