பிரான்ஸில் தேசிய கீதத்தை தவறாக பயன்படுத்திய ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள்!
தேசிய கீதத்தை தவறாக விளம்பரப்படுத்தியதற்காக பாரீஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் தெற்கு சூடான் பங்குபற்றிய போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தென் சூடானின் தேசிய கீதத்திற்கு பதிலாக சூடானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு கூடியிருந்த பார்வையாளர்களின் இரைச்சல் காரணமாக சூடானின் தேசிய கீதம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெற்கு சூடானின் தேசிய கீதம் மீண்டும் ஒலிபரப்பப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 31 times, 1 visits today)





