லீனா நதியில் கலந்த பெற்றோல் : அவசரநிலை பிரகடனம்!
																																		ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லீனா நதியில் இரண்டு எரிபொருள் டேங்கர் கப்பல் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதன்காரணமாக உலகின் 11 ஆவது நீளமான நதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள லீனா நதியில் பெற்றோல் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இர்குட்ஸ்க் பகுதியில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த கொள்கலனில் 138 மெட்ரிக் டன் எரிபொருள் இருந்ததாகவும், அதில் எவ்வளவு பெற்றோல் ஆற்றில் கரைந்தது என்பதும் தெளிவாக தெரியவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பைக்கால் ஏரியிலிருந்து ஆர்க்டிக் பெருங்கடலுக்குப் பாயும் லீனா நதி உலகின் 11வது நீளமான நதியாகும்.
(Visited 16 times, 1 visits today)
                                    
        



                        
                            
