சரும அழகை அதிகரிக்க உதவும் எண்ணெய் குளியல்..!
அழகாக பராமறிக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்கு செயற்கையான க்ரீம்கள் மற்றும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால், சில வேளைகளில் வீட்டில் இருக்கும் பொருட்களே சருமத்தை பராமரிக்கலாம். அதில் ஒன்றே குளிக்கும் போது உடலில் எண்ணெய் தேய்ப்பது. இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம்.
வறண்ட சருமம்:
வறண்ட சருமம், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவும். எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு சிறந்ததாகும். ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்:
ஏண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால் மன அழுத்தம்குறையும். மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை நிர்வகிக்கவும் உதவும். மனம் புத்துணர்ச்சி பெறவும் துணைபுரியும்.
உடல் வலியை குறைக்கும்:
எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வது கீல்வாதம் உள்ளிட்ட உடல் வலியைப் போக்க உதவும். குறிப்பாக சூடான எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளை