மண்டேல்சன் சர்ச்சை – தனிப்பட்ட தொலைபேசி தகவல்கள் வெளியிடப்படும் சாத்தியம்
அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவராக நியமிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சையில், லார்ட் மாண்டல்சனின் தனிப்பட்ட தொலைபேசி செய்திகள் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அவரது கையடக்கத் தொலைபேசி தகவல்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவை அலுவலகம் ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிடத் தயாராக உள்ளதென
கூறப்படுகிறது.
இதில் தொழிலாளர் கட்சி அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் அவர் பரிமாறிய தகவல்களும் அடங்கும். இதுவரை அதிகாரிகள் அவரது அலுவலக தொலைபேசி தகவல்களை மட்டுமே அணுகியுள்ளனர்.
இதேவேளை, இந்த நடவடிக்கை மோர்கன் மெக்ஸ்வீனியின் தொலைபேசி திருட்டுடன் தொடர்புடையதல்ல என்று அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், சில முக்கிய தகவல்கள் அந்த திருட்டினால் இழந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
லார்ட் மாண்டல்சனின் தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தில் கொண்டிருந்த செல்வாக்கு வெளிச்சமிடப்படும் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.
மேலும், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த அவரது தொடர்பு குறித்து முன்பே சர்ச்சை எழுந்தது.
இந்த பின்னணியில், அவரது நியமனத்திற்கான ஆவணங்களை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, மேலும் பெரியளவிலான ஆவணத் தொகுப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.





