ஒருநாள் தொடர் – இந்திய அணிக்கு இலகுவான வெற்றி இலக்கு
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இன்று ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நிரஞ்சன் ஷா(Niranjan Shah) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில், சுப்மன் கில்(Shubman Gill) 56 ஓட்டங்களும் கே.எல்.ராகுல்(KL Rahul) 112 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 285 ஓட்ட இலக்கை நோக்கி தற்போது விளையாடி வரும் நியூசிலாந்து அணி 41 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் பெற்றுள்ளது.




