Deepseekக்கு போட்டியாக களமிறக்கிய o3-mini – அதிரடி காட்டும் ஓபன் ஏஐ
DeepSeek செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு போட்டியாக குறைந்த விலையில் o3 Mini என்ற Chat GPTயை Open AI நிறுவனம் களமிறக்கியுள்ளது.
Chat GPTயின் வருகை தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்படிChat GPTயின் பலதரப்பட்ட அதிநவீன சேவைகளையும் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் சீனாவைச் சேர்ந்த DeepSeek நிறுவனம் DeepSeek R1 என்ற புதிய AI தொழில்நுட்பத்தை வெளியிட்டது.
மேலும் இதற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் மிகக் குறைவு என்பதாலும், கட்டணமில்லா சேவைகளில் Chat GPTயை விட அதிக வசதிகளை வழங்கியதாலும் பலரும் DeepSeek பக்கம் செல்லத்தொடங்கினர்.
இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தையே ஸ்தம்பிக்கும் சூழல் உருவானது. DeepSeek ஏஐக்கு போட்டியாக o3 Mini என்ற AI தொழில்நுட்பத்தை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் மீண்டும் பயனர்களின் பார்வை ஓபன் ஏஐ பக்கம் திரும்பியுள்ளது. தொடர்ந்து இந்த AI போரில் ஏனைய நாடுகளும் தங்களது AI அம்சங்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.