நுவரெலியா – குளியலறையில் இருந்து முதியவர் சடலமாக மீட்பு !

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
75 வயதுடைய பெருமாள் வடிவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் பின்புறத்தில் உள்ள குளியலறையில் தவறான முடிவெடுத்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 18 times, 1 visits today)