நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நைஜீரியாவில் ஆயுத தாரிகளால் ஏறக்குறைய 215 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்வாராவில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியில் இருந்து நேற்று குறித்த பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் 52 மாணவர்கள் கடத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சரியான எண்ணிக்கை மதிப்பிடப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் 215 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
“காவல்துறை தந்திரோபாயப் பிரிவுகள், இராணுவக் குழுக்கள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிள்ளது.





