அணு உலை கழிவுநீர் வெளியேற்றம் – கடல் உணவுகள் தொடர்பில் அச்சத்தில் ஜப்பானியர்கள்
புகுஷிமா அணு உலை கழிவு நீர் பசுபிக் பெருங்கடலில் வெளியேற்றப்பட்டும் இடம் அருகை பிடிக்கப்படும் மீன்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கான்றனவா என தினமும் சோதனை நடத்தி வருவதாக ஜப்பான் நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அச்சமின்றி மீன் வாங்கி சாப்பிட ஏதுவாக ஆய்வு முடிவுகளை தினமும் இணையத்தில் அவர்கள் பதுவேற்றி வருகின்றனர்.
ரிட்டியம் என்ற கதிர்வீச்சு தனிமத்தை தவிர மற்ற அனைத்து கதிர்வீச்சு தனிமங்களையும் அகற்றிய பின்பே கழிவு நீர் கடலில் வெளியேற்றப்படுவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இருந்த போதும் அங்கிருந்து கடல் உணவிகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.புகுஷிமா அசு உலையின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு கழிவு நீரையும் கடலில் வெளியேற்ற 30 ஆண்டுகள் ஆகும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)