சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து விவாதிக்க சிறப்பு அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (ஜூன் 28) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06) பாராளுமன்றத்திலும் பொது நிதி தொடர்பான குழு முன்னிலையிலும் (COPF) சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
பாரிஸில் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் FRANCE 24 க்கு அளித்த பேட்டியில் பேசிய ஜனாதிபதி இந்த திட்டம் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், கடன் மறுசீரமைப்பு பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதால், வெளிநாட்டு பயணங்கள் உட்பட கொழும்புக்கு வெளியிலுள்ள ஏனைய அனைத்து விஜயங்களையும் இரத்து செய்து கொழும்பில் தங்கியிருக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.