“பிக் பாஸ்”க்கு என்ட்டு கார்ட் போட்டாச்சா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் ஷோ இந்தியாவில் எந்த அளவுக்கு பிரபலம் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதில் போட்டியாளர்களாக பங்கேற்கும் நபர்கள் பெரிய அளவில் பிரபலம் ஆகி புகழின் உச்சிக்கே செல்கிறார்கள்.
ஹிந்தியில் கடந்த 20 வருடங்களாக பிக் பாஸ் ஷோ நடைபெற்று வருகிறது. அதை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஷோவை நடத்தும் தயாரிப்பு நிறுவனமான Banijay Asia (Endemol Shine) நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் ஹிந்தியில் பிரபலமான Khatron Ke Khiladi ஷோவும் இந்த வருடம் நடக்காது என்றும் கூறப்படுகிறது.
ஹிந்தியை போலவே தமிழ், தெலுங்கிலும் பிக் பாஸ் ஷோவின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.
(Visited 26 times, 1 visits today)