துணைப் பிரதமரை உடன் பதவிநீக்கம் செய்த வடகொரிய அதிபர்!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) பொருளாதாரக் கொள்கையை மேற்பார்வையிடும் உயர் அமைச்சரவை அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்கியோங்கில் (Hamgyong) உள்ள தொழில்துறை வசதியான ரியோங்சாங் மெஷின் (Ryongsong Machine) வளாகத்திற்கு பயணம் செய்த அவர், துணைப் பிரதமர் யாங் சுங் ஹோவை (Yang Sung Ho) “அந்த இடத்திலேயே” பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
வடகொரியாவில் பொருளாதார மந்த நிலையை சீரமைக்க அரசாங்கம் போராடி வருகின்ற நிலையில், அதிகாரிகளின் திறமையின்மையால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





