ரஷ்யாவிற்கு எல்லையில் வடகொரிய துறைமுகம் : வலுக்கும் சந்தேகம்!
உக்ரைன் – ரஷ்யா போரில், மேற்கத்தைய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வழங்குவதை போல ரஷ்யாவிற்கு வடகொரியா உதவி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இருப்பினும் இந்த கூற்றை வடகொரியா மறுத்து வருகிறது.
இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் வடகொரியாவின் துறைமுகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தில் இருந்து ரஷ்யாவிற்கு ஆயுத பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாக வல்லுனர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை எடுக்கப்பட்ட நஜின் துறைமுகத்தின் செயற்கைக்கோள் படங்கள், இதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில், நூற்றுக்கணக்கான கப்பல் கொள்கலன்கள் ஏற்றப்பட்டு இறக்கப்படுகின்றன, மற்றும் ரயில் கார்கள் சரக்குகளை ஏற்றிச் செல்ல தயாராக இருப்பதைக் காட்டுவதாக கூறப்படுகிறது.