வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரிய மக்கள் : கிம்மின் அதிரடி உத்தரவு!
சீனாவுடனான நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் இருந்து மீட்க வட கொரியா வெளியில் இருந்து உதவியை நாடாது என்று தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்களை தலைநகருக்கு அழைத்த அவர், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வீடுகளை புனரமைக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும் சுமார் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று கிம் கூறினார்.
அதுவரை, தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற வீரர்கள் அடங்கிய குழுவில் சுமார் 15,400 பேருக்கு இடமளிக்க அவரது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.





