தேசிய அளவிலான விரிவான மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வட கொரியா தலைவர்

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (DPRK) உயர்மட்டத் தலைவர், அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு விரிவான மாற்றத்தை நோக்கிய முயற்சிகளை விரைவுபடுத்துமாறு தனது நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) இன்று (09) தெரிவித்துள்ளது.
கொரிய தொழிலாளர் கட்சியின் (WPK) பொதுச் செயலாளரும், DPRK மாநில விவகாரத் தலைவருமான கிம் ஜாங் உன், WPK நிறுவப்பட்ட 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (8) கட்சி நிறுவன அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தபோது ஆற்றிய உரையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
WPK அதன் எட்டாவது கட்சி மாநாட்டிலிருந்து சோசலிசத்தின் விரிவான வளர்ச்சியை அடைய ஒரு புதிய பாதையைப் பின்பற்றியுள்ளது என்று கிம் கூறினார்.
ஒரு தசாப்தத்தில் அனைத்து பகுதிகளையும், அனைத்து துறைகளையும், அனைத்து பிராந்தியங்களையும் மாற்றுவதற்கு, இப்போது இருப்பதை விட மிக வேகமாக புதுமைகளை அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் துணிச்சலான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும், இரட்டிப்பாக்கப்பட்ட, அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்