கொரோனா தொற்றுக்கு பின்னர் முதல் முறையாக எல்லைகளைத் திறக்கும் வடகொரியா
வட கொரியாவின் ஒரு நகரம் கொரோனா தொற்றிற்கு பின்னர் முதல் முறையாக இவ்வாண்டு டிசம்பரில் சுற்றுப்பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு அதன் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. மலைப்பாங்கான சாம்ஜியோன் பகுதிக்குப் பயணிகள் செல்லலாம் என்று இரண்டு சீன சுற்றுலா நிறுவனங்கள் கூறியது.
2020ஆம் ஆண்டு வட கொரியா அதன் எல்லைகளை மூடியது. சென்ற ஆண்டின் நடுப்பகுதியில்தான் அது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
எல்லைகள் மூடப்பட்டதால் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிகள் பாதிக்கப்பட்டன. அதனால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.
ஸ்ரீநாட்டின் அணுசக்தித் திட்டங்கள் காரணமாக அனைத்துலகத் தடைகள் உணவுப் பற்றக்குறையை மோசமாக்கியது.
தற்போது சாம்ஜியோன் நகரம் மட்டும் திறந்துவிடப்படுவது உறுதிசெய்யப்பட்டாலும் பியோங்யாங்கும் மற்ற பகுதிகளும் திறந்துவிடப்படும் என்று நம்பப்படுகின்றது.