அமெரிக்காவை அடையும் திறன் கொண்ட ஏவுகணையை சோதிக்க தயாராகும் வடகொரியா!
, வட கொரியா தனது ஏழாவது அணுசக்தி சோதனைக்கான தயாரிப்புகளை முடித்துவிட்டதாகவும், அமெரிக்காவை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணையை சோதிக்க தயாராகி வருவதாகவும் தென் கொரியாவின் இராணுவ புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு நகரமான புங்கியே-ரியில் உள்ள தனது சோதனை மைதானத்தில் அணு ஆயுத சோதனை நடத்துவதற்கான ஆயத்தங்களை வட கொரியா முடித்துவிட்டதாக ஏஜென்சி நம்புகிறது.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், அமெரிக்கத் தேர்தலைச் சுற்றி அணு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் போன்ற பெரிய ஆத்திரமூட்டல்களை வட கொரியா நடத்தும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சமீபத்திய மாதங்களில் தனது இராணுவ அணுசக்தி திட்டத்தை வெளிப்படுத்தினார்.
பல்வேறு ஏவுகணை அமைப்புகளை சோதித்து, செப்டம்பரில் ஆயுதங்கள் தர யுரேனியம் தயாரிப்பதற்கான ரகசிய வசதியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.