அடுத்த 05 ஆண்டுகளில் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க வடகொரியா உறுதிப்பூண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் முக்கிய வெடிமருந்து நிறுவனங்களை பார்வையிட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ( Kim Jong Un) மேற்படி சமிக்ஞை செய்ததாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“போர் தடுப்பை வலுப்படுத்துவதில் நாட்டின் ஏவுகணை மற்றும் ஷெல் உற்பத்தித் துறை மிக முக்கியமானது” என்றும் கிம் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய வெடிமருந்து நிறுவனங்களின் நவீனமயமாக்கலுக்கான வரைவு ஆவணங்களை கிம் அங்கீகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் தனது மகளுடன் 8,700 டன் எடைக் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலையும் கிம் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





