வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களுக்கு வட கொரியா வெளியிட்ட அறிவிப்பு!

வட கொரியா, நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த தொடங்கியுள்ள நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் அதன் குடிமக்கள் இனி நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நோய்ப்பரவல் தணிந்துவிட்டதால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்தது. வெளிநாட்டிலிருந்து திரும்புவோர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர்.
அது ஏற்கெனவே, ரஷ்யா, சீனா ஆகியவற்றுடனான விமானச் சேவைகளைத் தொடங்கிவிட்டது.
வட கொரியாவின் தேசிய விமான நிறுவனமான Air Koryo மூவாண்டுகளுக்குப் பிறகு அனைத்துலக விமானச் சேவைகளைத் தொடங்கியது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாகக் கடந்த மாதம் வெளிநாட்டுப் பிரமுகர்கள் பியோங்யாங்கில் ராணுவ அணிவகுப்பைக் காண அழைக்கப்பட்டனர். சீன, ரஷ்ய அதிகாரிகள் அணிவகுப்புக்குச் சென்றிருந்தனர்.
(Visited 10 times, 1 visits today)