ஐ.நாவின் இருப்பையே கேள்விக்கு உட்படுத்தும் அமெரிக்கா : வடகொரியா விசனம்!
ஐக்கிய நாடுகள் சபையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அமெரிக்காவின் “வெட்கமற்ற” நடவடிக்கைகளை வட கொரியா இன்று கண்டித்துள்ளது.
இது தொடர்பில் வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை கடுமையாக விமர்சித்துள்ளது,
அவ்வாறான தடைகளை விட “ஐ.நா.வில் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய மற்றும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்சினையாக அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“ஐ.நா.வின் இருப்பையே அமெரிக்கா வெறுக்கிறது” என்று வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததை தொடர்ந்து வடகொரியாவின் அறிக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





