வட கொரியாவில் புதிதாக திறக்கப்பட்ட கடற்கரை ரிசார்ட்டிற்கு வெளிநாட்டினருக்கு தடை விதிப்பு: வெளியான அறிவிப்பு

வட கொரியா புதிதாக திறக்கப்பட்ட கடற்கரை ரிசார்ட்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரமாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி திறக்கப்பட்ட வொன்சன் கல்மா கடலோர சுற்றுலா மண்டலம், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் லட்சியங்களின் முக்கிய பகுதியாகக் கூறப்படுகிறது.
திறப்பு விழாவிற்கு முன்னதாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரை ஈர்க்கும் இடமாக இந்த ரிசார்ட் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வார நிலவரப்படி, வட கொரியாவின் சுற்றுலா வலைத்தளத்தில் வெளிநாட்டினர் “தற்காலிகமாக” இங்கு வர அனுமதிக்கப்படவில்லை என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வாரம், முதல் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வொன்சானில் உள்ள ரிசார்ட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது
(Visited 2 times, 2 visits today)