புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக 3 ஆராய்ச்சியாளர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர்(Joel Mogir), பிலிப் அகியோன்(Philip Achion) மற்றும் பீட்டர் ஹோவிட்( Peter Howitt)ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நோபல் பரிசு தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக(The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.