தாய் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரினா மச்சாடோவின் மகள்
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோவின்(Maria Corina Machado) மகள் அனா கொரினா சோசா(Ana Corina Sosa), நோர்வேயின்(Norway) ஒஸ்லோவில்(Oslo) நடைபெற்ற விழாவில் தாய் சார்பில் விருதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
விழாவிற்கு சற்று முன்பு, தலைமறைவாக உள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் “பாதுகாப்பாக” இருப்பதாகவும், நோர்வே தலைநகருக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் ஆனால் சரியான நேரத்தில் நகர மண்டபத்தில் நடைபெறும் விழாவிற்கு வரமாட்டார் என்றும் ஒரு குரல் செய்தியை அனுப்பியுள்ளார்.
2013 முதல் வெனிசுலாவின் ஜனாதிபதியாக இருக்கும் நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்காக மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
58 வயதான மச்சாடோ, மதுரோவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயணத் தடைக்கு உள்ளாகி, ஆகஸ்ட் 2024ல் தனது நாட்டில் தலைமறைவாக உள்ளார்.




