அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – ட்ரம்பிற்கு ஏமாற்றம்

அமைதிக்கான நோபல் பரிசு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) பெற்றுள்ளார்.
இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார். 1967ஆம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
வெனிசுலாவில் நிலவிய சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மக்கள் எழுச்சி போராட்டங்களின் போது, மரியா கொரினா பல நாட்கள் மறைந்து வாழ்ந்துள்ளார். இவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார்.
இவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, போராட்டத்தை அமைதி முறையில் நடத்தி வெற்றியும் கண்டிருந்தார். இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை, நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள் மற்றும் 94 பெயர்கள் நிறுவனங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது