ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பதில் பயனில்லை – அமெரிக்காவை மறைமுகமாக சாடிய புட்டின்
மேற்கத்திய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கேட்டுக்கொண்டார்.
ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்காமல் அர்த்தமற்ற செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவாத மன்றம் ஒன்றில் பேசிய அவர், ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றார்.
உலகில் ஆதிக்கம் செலுத்த ஆர்வம் காட்டிய நாடுகளை ரஷ்யா தடுத்ததாக அமெரிக்காவை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் சாடினார்.
மத்திய ஆசியாவில் நிலைத்தன்மையை ஏற்படுத்த சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்பதாக புட்டின் மேலும் தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)