எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை நிறுத்தப்படாது – டிரான் அலெஸ் திட்டவட்டம்!
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படாது என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21.02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த செயற்பாட்டின் மூலம் 58, 234ஆக பதிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





