போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு மன்னிப்பு கிடையாது – தேரரின் அதிரடி அறிவிப்பு
பௌத்த மதத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் கோடி முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாதென இரத்மலானை தர்ம ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஹெகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
அதற்கு சட்டத்தின் மூலமே பதிலளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த மதத்தை அவமதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே அவ்வாறு செய்தார் எனவும் அவர் தவறுதலாக அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் பௌத்த மதத்தை அவமதித்ததற்கு அவருக்காக பெற்றோர்கள் சென்று மன்னிப்பு கேட்பதாகவும், இது நாட்டு மக்களின் அனுதாபத்தை பெறும் முயற்சி என தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்தம் ஒரு வெளிப்படையான மதம் எனவும் அந்த மதத்தை இழிவுபடுத்துவதை மன்னிக்க முடியாது எனவும் இதுபோன்ற அவமதிப்புகளுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாட்டில் மத மோதல்களும் மதக் கும்பல்களும் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.