மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை -வாசுதேவ நாணயகார!
சர்வதேச நாணய நிதியம் நாட்டை ஆட்சி செய்கிறது. எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரை் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.
மருதானையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை. ஆகவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கணக்காளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு உண்மையை அறிவிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியமே நாட்டை தற்போது ஆட்சி செய்கிறது.தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த எந்த திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்தை கொண்டு எவரிடமிருந்து கடன் பெறலாம் என்பது குறித்து மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.





