பிரான்ஸில் குளிர்சாதன வசதிகள் இல்லை – வீரர்களுக்கு வெளியான தகவல்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் தங்கும் இடத்தில் குளிர்சாதன வசதி தேவைப்படாது என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
கோடைக்காலத்தில் விளையாட்டுகள் நடைபெற்றாலும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். சூரிய வெளிச்சம் உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டடங்களின் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டாளர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் கட்டடங்களை வடிவமைத்துள்ளதாக அவர்கள் கூறினர். ஒலிம்பிக் விளையாட்டுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
விளையாட்டுகளில் மொத்தம் 2,800 வீடுகள் பயன்படுத்தப்படும். வீடுகள் வழக்கத்தை விட பாதிக்கும் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றும்.
விளையாட்டுகள் முடிந்த பின் அவை நிரந்தரமான குடியிருப்பு வசதிகளாக மாற்றப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர். ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும். அதன் பின் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கும்.